பதிவு செய்த நாள்
28
டிச
2015
12:12
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் மறவபட்டி, உலகம்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி, முத்தழகுபட்டி, வெள்ளோடு, சிறுகுடி, நத்தம், கொசவபட்டி, தவசிமேடை உள்ளிட்ட பகுதிகளில் காளைகள் வளர்க்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கோர்ட் தடை விதித்ததை அடுத்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மாவட்டத்தின் பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னமனாயக்கன்பட்டி, குரும்பபட்டி பகுதியை சேர்ந்த காளை வளர்ப்போர் தடை நீங்க வேண்டி நேற்று தங்களது காளைகளுடன் சென்று பொங்கல் வைத்து விநாயகர், காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.