பதிவு செய்த நாள்
28
டிச
2015
12:12
நங்கவள்ளி: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், உடைந்த கதவு சீரமைக்கப்பட்டு, நேற்று இரவு பொருத்தப்பட்டது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், கடந்த, 24ம் தேதி, ஆருத்ரா தரிசனத்தின்போது நடந்த சம்பிரதாய நிகழ்ச்சியில், ராஜகோபுரத்தின் வலதுபுற மரக்கதவு உடைந்து தொங்கியது. அதில், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, கதவு சீரமைக்கும் பணி துவங்கி, நேற்று முடிந்தது. இரவு, 7 மணியளவில், அந்த கதவு, மீண்டும் பொருத்தப்பட்டது.