புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளையில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஐயப்பன் படம் ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.