பதிவு செய்த நாள்
30
டிச
2015
12:12
xபழநி:பழநி தைப்பூச திருவிழா ஜன.,18 முதல் 27 வரை நடக்கிறது.பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,18ல் காலை 10.30 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஜன.,23ல் இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம், 9 மணிக்கு வெள்ளித்தேரில் சுவாமி திருஉலா நடக்கிறது.ஜன.,24ல் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் விஸ்வரூப தரிசனம், பெரியநாயகியம்மன்கோயில் நான்குரதவீதிகளில் திருத்தேரோட்டம் மாலை 4.25 மணிக்கு நடக்கிறது.விழாவின் கடைசி நாள் ஜன.,27ல் தெப்பகுளத்தில் தெப்ப உற்சவ விழா நடக்கிறது. விழாநாட்களில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் யானை, குதிரை, மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் திருவுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தைப்பூசவிழா முன் ஏற்பாடுகளை இணைஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.