அவனியாபுரம்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், தடை செய்யப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கவும் வலியுறுத்தி, மதுரை அவனியாபுரம் அய்யனார், மந்தையம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் பங்கேற்றனர். காளைகளுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன.
உசிலம்பட்டி: இதே கோரிக்கையை வலியுறுத்தி, உசிலம்பட்டியில் தென் இந்திய பா.பி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கிலி, மாவட்ட நிர்வாகிகள் பாண்டியராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.