பதிவு செய்த நாள்
08
ஆக
2011
11:08
ஊட்டி : நீலகிரி மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், ஊட்டியில் நேற்று ஆடிப்பூர பெருவிழா நடந்தது.ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துவங்கிய ஊர்வலத்தை உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் துவக்கி வைத்தனர். மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயம் எடுத்து வந்தனர். ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் பாறை முனீஸ்வரர் கோவிலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸை அடைந்தது. காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத பள்ளி மாணவ, மாணவியருக்கு கம்பளி ஆடைகள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டன. இயக்க தலைவர் இந்திராணி நடராஜன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மணி உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை போஜன், பத்மநாபன், ரமேஷ்குமார், சுரேஷ், கிருஷ்ணா, கோவிந்தராஜ், ராஜகோபால், ஜெயலட்சுமி, ஆகியோர் மேற்கொண்டனர். மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
குன்னூர்: குன்னூர் உழவர் சந்தை ராஜாஜி நகரில் உள்ள ஜெய்பவானி அம்மன் கோவிலின் 16வது ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8.30 மணி முதல் ஏக தின லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மாலை 5.00 மணிக்கு பெள்ளி கவுடர் திருமண மண்டபத்தில் "அள்ளி கொடுக்கும் சிவன் என்ற தலைப்பில் தேசமங்கையற்கரசி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். நேற்று காலை 8.30 - 2.00 மணி வரை துர்கா ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.