ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2016 12:01
ஓமலூர்: ஓமலூர் அருகேயுள்ள, பொன்னாக்கூடல் காடையாம்பட்டி காரியசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா மற்றும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. வரும், 8ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் விழா தொடங்குகிறது. 6 மணிக்கு திருப்பாவை பாராயணம், 7 மணிக்கு மங்கள தீபாராதனை நடக்கிறது. 8 மணிக்கு மேல் ராகு கேது பூஜைகள் ஆரம்பமாகிறது. தொடர்ந்து, கலச அபி?ஷகம் நடக்கிறது. 9ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, 24 வகை அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து திருப்பாவை பாராயணமும், பக்தர்கள் வழிபாடும் நடக்கிறது. இரவு, 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.