திரவுபதி அம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2016 12:01
சின்னசேலம்: சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராகு பகவான் கன்னிராசியில் இருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் பெயர்ச்சியடைந்தனர். இதை முன்னிட்டு சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் பால் அபிஷேகம், கலச அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ராகுவிற்கு உளுந்து தானியமும், கேதுவிற்கு கொள்ளு தானியமும் யாகத்தில் இட்டு, தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கங்காதீஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி, செல்வமுருகன் ஆகிய கோயில்களிலும் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.