திண்டுக்கல்,:திண்டுக்கல்லில் 20ம் தேதி நடக்க உள்ள அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.திருப்பணிக் குழுத் தலைவர் வேலுச்சாமி, உறுப்பினர் கந்தசாமி கூறியதாவது: ஜன.17 முதல் 19ம் தேதி வரை 5 கால யாகசாலை பூஜைகள், 120 சிவாச்சாரியர்கள் மூலம் நடக்க உள்ளது. ஜன.20ம் தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரத்திற்கு 52 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தையொட்டி திண்டுக்கல் நகரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வர வசதியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் உண்டு, என்றனர்.