பதிவு செய்த நாள்
13
ஜன
2016
12:01
திருப்பூர்;பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.பழனி முருகன் கோவில் தை பூச விழாவுக்காக, ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து, பாதயாத்திரையாக செல்வது வழக்கம். திருப்பூர்- தாராபுரம் ரோட்டிலும், பல்லடம்- கோவை ரோட்டிலும், ஏராளமான பக்தர்கள் நடந்து செல்ல துவங்கியுள்ளனர். பெரும்பாலும் இரவு நேரங்களில் செல்கின்றனர்; கரடு முரடான மண்ணில் இறங்க முடியாமல், ரோட்டோரத்தில் நடந்து செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இவ்விஷயத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், நடந்து செல்லும் பக்தர்களுக்கு," ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டவும், <உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் நடந்து செல்லும் முக்கிய ரோடுகளில், ரோந்து பணியை மேற்கொள்வதுடன், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.