செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக 3ம் ஆண்டு துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2016 02:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் எழுந்தருளியுள்ள செம்பொற்சோதிநாதர் கோவிலில் 3ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. மேலும் சதய நட்சத்திர தினமானதால், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில் 8ம் திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும், அதிலுள்ள 658 பாடல்களையும் செம்பொற்சோதிநாதர் கோவிலில், ஓசூர் திரூக்கூட்ட அடியார்கள் ஓதினர். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழா மற்றும் திருவாசகம் முற்றோதலிலும் பங்கேற்றனர்.