பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச திருத்தேர் பெருவிழா, (ஜன., 16) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இந்த ஆண்டு தைப்பூச விழா, (ஜன., 16) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. (ஜன., 17) முதல், 23ம் தேதி வரை, காலை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7 மணிக்கு, அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை,
மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார். ஜனவரி, 24ம் தேதி, காலை, 11 மணிக்கு, சுவாமி திருத்தேரில் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு, 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி, 25ம் தேதி முதல், காலை, 9 மணிக்கு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு சத்தாபரணம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 26ம் தேதி காலை விடையாற்றி, இரவு மஞ்சள் நீர் பல்லக்கு, 27ம் தேதி, காலை அபிஷேகம், மதியம்
அன்னதானம், இரவு, மயில் வாகனத்தில் திருவீதி உலா, 28ம் தேதி, காலை, காவிரி ஆற்றுக்கு
செல்லும் பக்தர்கள் புனித நீராடி, பால், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்பட பல்வேறு காவடிகளை
எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்றனர்.