பதிவு செய்த நாள்
12
ஆக
2011
11:08
புகழுக்குரிய பள்ளிவாசல் ஒன்றை ஒருவர் வாழ்க்கையில் கட்டும் பாக்கியம் கிடைத்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?எவர் பள்ளிவாசலை கட்டுகிறாரோ, அவருக்காக அப்பள்ளிவாசலைப் போன்ற வீடு சொர்க்கத்தில் கட்டப்படுகிறது. இதைவிட, பெரிய பாக்கியம் மனிதனுக்கு வேறென்ன வேண்டும்! எந்தப்பகுதியில் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ, அதுதான் இறைவனுக்கு மிகப்பிரியமான இடமாகும். கியாமநாளில் அல்லாஹ்வின் அர்ஷூ நிழலில் ஏழுவகை மனிதர்கள் இருப்பார்கள். எவருடைய உள்ளம் பள்ளிவாசலையே நாடுகிறதோ, அவர் ஏழு வகையினரில் ஒருவகையைச் சேர்ந்தவராக இருப்பார். எவர் பள்ளிவாசலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கிறாரோ, அவர் அவ்வளவு தூரம் நடந்தே பள்ளிவாசலுக்கு வர முடியும். அவர் எவ்வளவு அடியெடுத்து வைக்கிறாரோ, அதே அளவுக்கும் அதிகமான நன்மை கிடைக்கிறது.
எவர் பரிபூரணமாக வீட்டில் ஒளு செய்து பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருகிறாரோ, அவர் இறைவனின் விருந்தாளியாவார். அந்த விருந்தாளியைக் கவுரவப்படுத்துவது அல்லாஹ்வின் கடமையாகி விடுகிறது. இனிய நண்பர்களே! இந்த நல்ல வேளையில் அரிய கருத்துக்களை எல்லாம் அல்லாஹ்வின் கருணையால் தெரிந்து கொண்டிருக்கிறோம். இனி பள்ளிவாசலுக்கு தவறாமல் சென்று வருவோம் தானே!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32 மணி.