கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் முளைப்பாரியை இறக்கி வைத்து இந்துக்கள் வழிபாடுசெய்த பின் கடலுக்கு எடுத்து சென்று கரைத்தனர். ஏர்வாடியில் யாதவர்களுக்கு பாத்தியமான வாழ வந்தான் அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா ஆக.2ல் துவங்கியது. தர்ஹா ஹக்தார் கிட்டங்கி செய்யதுவிற்கு, கோயிலில் முதல் மரியாதை வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் கோயிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் முஸ்லிம் தெருக்கள் வழியாக ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா வந்தடைந்தது. தர்கா ஹக்தார் சுல்த்தான் இபுராகிம் உலக மக்களிடத்தில் சமூக நல்லிணக்கம் தொடரவும், அமைதியாக வாழவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பின் பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று கடலில் கரைத்தனர். ஏர்வாடி யாதவ சமூக முன்னாள் தலைவர் பக்கிரி சாமி கூறுகையில், ""பல தலைமுறையாக சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக பாதுஷா நாயகம் தர்கா விளங்கி வருகிறது, என்றார்.