பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
மைசூரு: மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில், பிப்ரவரி, 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை கும்பமேளா நடக்கவுள்ளது. டி.நரசிபுரா திரிவேணி சங்கமத்தில், பிப்ரவரி, 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை கும்பமேளா நடக்கவுள்ளதால், மைசூரு மாவட்ட எஸ்.பி., அபினவ்கரே தலைமையிலான அதிகாரிகள் குழு, கும்பமேளா நடக்கும் இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.பின், நிருபர்களிடம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கும்பமேளா நடத்துவதற்கு, மைசூரு மாவட்டம் நிர்வாகம், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து ஸ்ரீகுஞ்சா நரசிம்ம சுவாமி கோவில் வரை தற்காலிக தொங்கு பாலம், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் வசதி, நதிக்கு அருகில் மேடை, பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை, பெண்களுக்கு ஆடை மாற்ற தனி அறை உட்பட, அனைத்து வசதிகளும் செய்யப்படும். இதற்கான பொறுப்புகள், அந்தந்த துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.