Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி மகா பெரியவர் சீடர் நாகேந்திர ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 168வது உழவாரப்பணி! இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ரகூத்தம சுவாமிகளின் 443 வது ஆராதனை விழா!
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ரகூத்தம சுவாமிகளின் 443 வது ஆராதனை விழா!

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
03:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில், சுவாமிகளின் ஆராதனையை முன்னிட்டு மூல பிருந்தாவனம் வெள்ளிகவசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாவபோதகர், உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீ ரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 443 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான காலை 4:00 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. 5:00 மணிக்கு ஸ்ரீ ராமர் பூஜை, 6:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்கரத்துடன் மங்கல ஆரத்தி நடந்தது. குருஜி சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு முத்ராதானம் செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முத்ராதானம் பெற்றுக் கொண்டனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவின்படி பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar