கோபி: கோபி பச்சமலை கோவிலில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு, கேது பெயர்ச்சி இன்று நடக்கிறது. ராகு பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கிறார். இதையொட்டி காலை, 8.30 முதல், 11.30 மணி வரை ராகு, கேது பெயர்ச்சி கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம், சிறப்பு ராகு-கேது பரிகார ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து காலை, 11.30 மணிக்கு நவக்கிரக மூர்த்திகளுக்கு அபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு பரிகார அர்ச்சனை, 12.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.