திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2016 10:02
திருவல்லிக்கேணி : பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை கொடி ஏற்றப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. காலை, 10:00 மணியளவில், கோவில் வளாகத்தில் கொடியேற்று விழாவும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, புன்னை மர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.