பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
விக்கிரவாண்டி: தொரவி கைலாச நாதர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில், பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணி விரைந்து நடக்க வேண்டி, நேற்று காலை, கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8:00 மணிக்கு, விநாயகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாம சுந்தரி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை சிவனடியார் சரவணன் செய்தார். புதுவை காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தலைமையில், சிவனடியார் கல்யாணி அம்மாள் குழுவினர், மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதினர் புதுச்சேரி மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், தொழிலதிபர் சுப்பிரமணி, ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.