பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
செஞ்சி: செஞ்சியில் இருந்து ராமானுஜர் வைணவ பாத யாத்திரை குழுவினர் திருப்பதி புறப்பட்டு சென்றனர். செஞ்சிக்கோட்டை ராமானுஜர் வைணவ பாத யாத்திரை சபா சார்பில் முதலாம் ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை நடந்தது. இதை முன்னிட்டு செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேசபெருமாளுக்கும், சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரமும், வழிபாடும் செய்தனர். விரதம் இருந்த பக்தர்கள் துவங்கிய பாதயாத்திரையை, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மஸ்தான் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், குருசாமி காளி சாமிக்கண்ணு, பாதயாத்திரை குழு நிர்வாகிகள் கண்ணபிள்ளை, மணி, பச்சையப்பன், அருண்மணி, குமார், ஏழுமலை, பச்சையப்பன், பாபு, சின்னதம்பி, சுந்தர், பாஸ்கர், பன்னீர், திருமலை, ரமேஷ், ரவி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.