விருத்தாசலம்: மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவிலில் இன்று (2 ம் தேதி) செடல் திருவிழா நடக்கிறது. விருத்தாசலம் மணிமுக்தாற்ற ங்கரை செல்லியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை சப்த மாதா சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை 9:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, செடலணிந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். மாலை 4:30க்கு மேல் 6:00 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.