பதிவு செய்த நாள்
02
பிப்
2016
11:02
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சுந்தர அய்யனார் கோவிலில் உள்ள சப்த கன்னிகைகள் மற்றும் பரிவார மூர்த்திகளான தட்சணாமூர்த்தி, சுந்தர பாலமுருகன், சுந்தர ராஜ பெருமாள் சன்னதிகளுக்கு, வரும் 5ம் தேதி குட முழுக்கு நடக்கிறது. இதையொட்டி, வரும் 4ம் தேதி காலை 9.௦௦ மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது. மாலை 6.௦௦ மணிக்கு யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நடக்கிறது. 5ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, சகல தேவதா ஹோமங்கள், யாத்ரா தானம், காலை 8.30க்கு கலச புறப்பாடு நடந்து, காலை 8.45 மணிக்கு சப்த கன்னிகைகள், விமானத்திற்கு குட முழுக்கு நடக்கிறது. காலை 9.௦௦ மணிக்குள் தட்சணாமூர்த்தி, சுந்தர பாலமுருகன், சுந்தரராஜ பெருமாள் ஆகியோருக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குடமுழுக்கு நடக்கிறது. 6ம் தேதி மண்டல பூஜை ஆரம்பமாகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.