முத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 11:02
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் சாமிநாதன் தெரு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பபப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. பிறகு அம்மனுக்கு பூஜை செய்த சங்குகளில் இருந்து சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை சிவாச்சாரியார்களும் ராமு பூசாரியும் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.