சேலம்: கும்பகோணம் பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலின் மகாமக விழா பிப்.,12 துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 10 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் இருந்து 1,500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர், மாவட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு கும்பகோணத்துக்கு இன்று மாலை செல்கின்றனர்.