பதிவு செய்த நாள்
26
பிப்
2016
11:02
உடுமலை: திருமூர்த்திமலையில் உள்ள, புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, திருமூர்த்திமலை. எழில் கொஞ்சும் இப்பகுதி, சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும், ஒரே சன்னதியில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் கும்பாபிஷேக விழா, 21ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை, 5:30க்கு, கோவிலில் இருந்து பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, கடங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. 6:00க்கு, பஞ்சலிங்க அருவி அருகில் அமைந்துள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில், விநாயகர், முருகன், பஞ்சலிங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று காலை, 6:15க்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில் கடங்கள் புறப்பாடு நடக்கிறது. 6:30 முதல், 7:00 மணிக்குள் விமான கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, விநாயகர், பாலசுப்ரமணியர், அமணலிங்கேஸ்வரர் சுவாமி மற்றும் மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மதியம், 12:00க்கு மேல், மகா அபிஷேகம், தச தானம், தச தரிசனம், தீபாராதனை நடக்கிறது.