கூடலுார்: கூடலுார் சக்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. கூடலுார் சக்தி விநாயகர் கோவிலின், 30வது ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலம் துவங்கி, மேல் கூடலுார், மைசூர் சாலை முனீஸ்வரர் கோவில் வழியாக, துப்புக்குட்டி பேட்டை வரை சென்று இரவு கோவிலை வந்தடைந்தது. விழாவை முன்னிட்டு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.