பதிவு செய்த நாள்
26
பிப்
2016
12:02
குமாரபாளையம்: குமாரபாளையம் அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதாவின், 68வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நகரமன்ற தலைவர் தனசேகரன் தலைமையில், கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. கோட்டமேடு பத்ரகாளியம்மன், மேற்கு காலனி கருமாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரமன்ற துணைத்தலைவர் பாலசுப்ரமணி, கவுன்சிலர்கள் முருகேசன், லட்சுமி நாராயணன், மாதேஸ், கோபால், நிர்வாகிகள் அர்ச்சுனன், ரவி, அழகேசன், செல்வராஜ், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர அ.தி.மு.க., செயலாளர் நாகராஜன் தலைமையில் குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. கட்சி அலுவலகத்தில் ஈரோடு ரத்த தான வங்கியுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் உள்பட வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. துணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர மகளிரணி செயலாளர் பச்சியம்மாள், முன்னாள் நகர செயலாளர் குமணன், கவுன்சிலர்கள் சேகர், அறிவழகன், நிர்வாகி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். மீனவர் அணி மாநில துணை செயலாளர் மணி, நிர்வாகிகள் சுப்பிரமணி, மாது, ஜோதி உள்ளிட்ட பலர் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினர். அனைத்து வார்டுகளிலும் கோலப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.