பதிவு செய்த நாள்
29
பிப்
2016 
11:02
 
 அவிநாசி: கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, 19ல் துவங்கி, 27ல் நிறைவடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான, கருவலூர் மாரியம்மன் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு சிம்ம வாகனம், 20ல் பூத வாகனம், 21ல் ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. வரும், 22ல் புஷ்ப விமானம், மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம் ஆகியன நடைபெறுகிறது. வரும், 23ல் தேரில் மாரியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 3:00 மணிக்கும், 24, 25 ஆகிய மூன்று நாட்களிலும் தேரோட்டம் நடக்கிறது. 26ல் தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 27ல் மகா தரிசன காட்சி, அன்னவானம், மஞ்சள் நீர், கொடியிறக்கம், 30ல் பாலாபிஷேகம், மறுபூஜை ஆகியவற்றுடன், விழா நிறைவு பெறுகிறது.