பதிவு செய்த நாள்
29
பிப்
2016
11:02
கொண்டலாம்பட்டி: செவ்வாய்பேட்டையில், சகல தோஷங்களையும் நீக்கும் மகா சுதர்ன ஹோமம், நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை, மாணிக்கம் தெருவில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத சுவாமி தேவஸ்தானத்தில், மகா சுதர்சன ஹோமம் நேற்று முன்தினம், நடந்தது. சகல தோஷங்களையும் நீக்கி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், திருமண யோகம், புத்திரபாக்கியம், வளமான வாழ்வு அமைய, நடத்தப்பட்ட சுதர்சன ஹோமம், காலை, 7 மணிக்கு, 108 கலச ஸ்தாபனத்துடன் துவங்கியது. காலை, 9 மணிக்கு, சங்கல்பம் செய்து, சுதர்சன ஹோமம், வேத மந்திரங்கள் ஓத நடத்தப்பட்டது. காலை, 11 மணிக்கு, முதற்கால பூர்ணாஹூதி செய்து, பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, உற்சவர்கள் பாண்டுரெங்கநாதர் சமேத ருக்மணி தேவி, சக்கரத்தாழ்வார், தன்வந்திரி ஆகியோர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்றும், சுதர்சன ஹோமம் நடந்தது.