பதிவு செய்த நாள்
29
பிப்
2016
11:02
பவானி: பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் மாசி மாத திருவிழா, வரும், 2ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பவானியில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., ஜானகிராம் தலைமை வகித்தார். கோவில்களின் பொங்கல் மற்றும் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் வருவர். ஆண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உடம்பில் சேறு பூசியும், பல்வேறு வேடமிட்டும் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இந்த சம்பவத்தின் போது புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து சுவாமி செல்லியாண்டியம்மன் கோவில் சென்றடையும். இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சியினர், அமைப்பினர் ஆலோசனை, கருத்துகள் தெரிவித்தனர்.