திண்டிவனம்: திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை ஏரிக்கோடி தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீ சஞ்சீவி வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 25ம் தேதி கோவிலில் யாகப் பூஜைகள் நடந்தது. 26ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மயிலம் பொம்மபுர ஆதினம், கவுன்சிலர் சந்திரன், பகுதி முக்கிய பிரமுக்கள் வெங்கடேசன், விநாயகம், செல்வராஜ், கார்த்திக், மூர்த்தி, சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கும்பாபிஷேக பூஜைகளை திண்டிவனம் நாகராஜ அய்யர், சீனுவாச அய்யர் மற்றும் குழுவினர் செய்தனர்.