பதிவு செய்த நாள்
20
ஆக
2011
01:08
தொழுகை செய்யும் முன்பு முஸ்லிம்கள் ஒளு செய்வது வழக்கம். அதாவது, கை, கால்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள். ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் ஒளு செய்தார்கள். அப்போது அவரது தோழர்கள், அண்ணலார் சுத்தம் செய்யும் போது சிந்திய தண்ணீரை கையில் ஏந்தி, தங்கள் முகத்திலும், உடலிலும் தடவிக் கொண்டனர். இதைக் கண்ட நாயகம்(ஸல்) அவர்கள், நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டார்கள். தோழர்கள் அவரிடம் அண்ணலே! உங்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தோம், என்றனர். உடனே நாயகம்(ஸல்) அவர்கள், உங்கள் அன்பைக் காட்டும் வழி இதுவல்ல. நான் எதைச் செய்கிறோனோ அதைச் செய்யுங்கள். எதை நான் விலக்கி விடுகின்றேனோ அதை நீங்கள் விலக்கி விடுங்கள். என் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவ்வாறே நடந்து காட்டுங்கள். அதை விட்டு, என்னை வெளிப்படையாக போற்றி புகழ்ந்து விட்டு, வாழ்க்கையிலே என்னை முன்மாதிரியாக கொள்ளாத யாரும் உறுதியாக என்னைப் பின்பற்றுவோர் ஆகமாட்டீர்கள், என்றார்கள். சுயதம்பட்டம் அடிக்கும் உலகில் இப்படியும் ஒருமாமனிதர் இருந்துள்ளார் என்பதை எண்ணும் போது உடல் புல்லரிக்கிறது. மனிதனுக்கு தற்பெருமை கூடாது என்பது இன்றைய சிந்தனையாக அமையட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி