மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் சிவராத்திரி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 12:03
உத்தமபாளையம்: பிரசித்தி பெற்ற உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை கம்பளிபோட்டு கும்பிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, மாலை அகல்விளக்கு பூஜை நடைபெற்றது. தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 6 ல் பால்குட ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்பர். மார்ச் 8 வரை இப்பெருந்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மூங்கில் அன்னை காமாட்சியம்மன் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.