தண்ணீர் இல்லாத தீர்த்தக்குளம் நீர் நிரப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2016 12:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிப்பட்டி சுயம்பிரகாஷேஸ்வரர்-தர்மசம்பத்தினி கோயில் தீர்த்த குளத்தில் நீர் நிரப்பி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் முன் உள்ள புஷ்கரணி நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாக பயன்படுத்தினர். சிவபுரிப்பட்டி, மனப்பட்டி, மட்டிக் கரைப்பட்டி,குமரத்தகுடிப்பட்டி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தினர்.பாலாற்றில் நீர்வரத்தின்றி குளம் வறண்டுள்ளது. இக்கோயிலில் முகூர்த்த நாட்களில் ஒரே நேரத்தில் 10 முதல் 20 திருமணம் நடக்கிறது. திங்கள்,வெள்ளிக் கிழமை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பக்தர்கள் வசதிக்கு ஒரு மின்னிசை தொட்டி உள்ளது.தற்போது குளத்தில் நீர் தேங்கும் பகுதி சீமைக் கருவேல் மரம் முளைத்து பராமரிப்பின்றி உள்ளது.இதை சீர்செய்து குளத்திற்குள் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.அந்த நீரில் குளத்தை நிரப்பி மீண்டும் தீர்த்தமாக பயன்படுத்த முடியும்.ஆழ்துளை கிணறு அமைக்க,கோயில் நிர்வாகம்,தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.