பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
புதுக்கோட்டை: ஆவுடையார்கோயில் தாலுகா, தீயத்தூர் கிராமம் ஸ்ரீபிரகன்நாயகி அம்பாள் உடனாகிய சகஸ்ரலெட்சுமீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. உலகிலேயே முதன் முதலாக ஆங்கிரச முனிவரால் வேள்வி வளர்க்கப்பட்ட ஸ்தலம், ராமபிரான் நேரில் வந்து வழிபட்ட ஸ்தலம், மஹாலெட்சுமி ஆயிரத்தெட்டு தாமரை மலர்களால் பூஜை செய்த ஸ்தலம், உத்திரட்டாதி நட்சத்திர சிவாலயம், அக்னிபகவான்-தீ, பிரம்மமூர்த்தி-அயன், சூரியபகவான்-ஊர் என அருளப்பெற்ற, தீயத்தூர் எனும் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும், ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீசகஸ்ரலெட்சுமீஸ்வரர் ஆலயத்தில் 7.3.2016 திங்கட்கிழமை, மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
7.3.2016 (திங்கள்): முதற்காலம்-இரவு: 9.30 மணி
8.3.2016 (செவ்வாய்): இரண்டாம் காலம்-இரவு: 12.01 மணி, மூன்றாம் காலம்-அதிகாலை: 2.00 மணி, நான்காம் காலம்-அதிகாலை: 4.00 மணி