கோபிசெட்டிபாளையம்: கோபி சவுண்டப்பூர் அருகே, ச.கணபதிபாளையத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா இன்று (மார்ச், 3ல்) கோலாகலமாக நடக்கிறது. கடந்த பிப்., 24ல் பூச்சாட்டு முடிந்து, அன்றிரவு கம்பம் நடப்பட்டது. அடசபாளையம் பவானி ஆற்றில் பக்தர்கள் நேற்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று காலை, 8 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. இன்றிரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 4ல் மஞ்சள் நீர் உற்சவம், மார்ச், 7 ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் செய்து வருகிறார்.