கும்மிடிப்பூண்டி : ஏரி மதகு ஓரம், 2.5 அடி உயரமுள்ள பழங்கால சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தேர்வழி கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு அருகே, சிலை ஒன்று இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு சென்று, அந்த சிலையை கைப்பற்றினர்.கிட்டத்தட்ட, 40 கிலோ எடை கொண்ட அந்த சிலையின், இரு கைகளும் உடைந்து இருந்தன. ஐம்பொன் சிலையாக இருக்க கூடும் என, போலீஸ் சந்தேகிக்கின்றனர். சிலையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வனமாலிதரனிடம் ஒப்படைத்த போலீசார், சிலை எப்படி அங்கு வந்தது, எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.