பதிவு செய்த நாள்
07
மார்
2016
12:03
திருப்பதி: திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில், மாதந்தோறும் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி, மார்ச் 4ல் நடந்தது.
அதன் பின், தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, மார்ச் 8ம் தேதி இரவு, 8:30 மணி முதல், 9ம் தேதி காலை, 10:00 மணி வரை, திருமலை ஏழுமலை யான் கோவில் மூடப்படும். மார்ச், 19 முதல், 23 வரை, திருமலையில், வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறும். திருமலையில், திருமணம் செய்து கொள்ள விரும்பும் பக்தர்கள் வசதிக்காக, புதிய இணையதளம் துவங்கப்படும். பக்தர்கள் விரும்பினால், தங்கள் ஊர்களில், சீனிவாச கல்யாண உற்சவம், வைபவவோற்சவம் நடத்தித் தரப்படும். இதற்கு, தங்கள் ஊரின் மண்டல தலைமையிடங்களில், ஒரு ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு இலவசமாக ஒதுக்க வேண்டும். உற்சவம் நடத்தும் செலவில், 40 சதவீதத்தை உற்சவ ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.