திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நடந்தது. திருவிழா காலத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழா முடிந்து கோயில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சிவலிங்கம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேலாளர் கணேசன் முன்னிலையில் எண்ணப்பட்டது. இப்பணியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பொது உண்டியலில் ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 51ம், தங்கம் 258 கிராம், வெள்ளி 1,050 கிராம் இருந்தன. திருப்பணி உண்டியலில் ரூ.ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 864, தங்கம் 12 கிராம், வெள்ளி 50 கிராம் என மொத்தம் ரூ.19 லட்சத்து 9 ஆயிரத்து 915, தங்கம் 270 கிராம், வெள்ளி 1,100 கிராம் இருந்தது.