வனத்துறை அனுமதி: வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2016 10:03
கோவை : மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக இருப்பது வெள்ளியங்கிரி மலைக்கோவில். கோவிலின் உச்சியில், சிவன் சுயம்பு வடிவில் காட்சியளிப்பார்.
சிவனை தரிசனம் செய்ய, ஆண்டுக்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். அடர்ந்த வனப்பகுதியில், இக்கோவில் அமைந்துள்ளால், ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே, பக்தர்கள் மலையேறுவதற்கு, வனத்துறை சார்பில் அனுமதியளிக்கப்படும். அதன்படி, வனத்துறை அனுமதி அளித்ததையடுத்து, கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஏழாவது மலைமீது வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தை, ஏராளமான பக்தர்கள் காத்திருந்த தரிசனம் செய்தனர்.