பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஏழாவது வைஷ்ணவ மாநாடு நேற்று நடந்தது.வரும், 2017ம் ஆண்டில், ராமானுஜரின், 1,000வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ராமானுஜரின் ஆன்மிக சேவை பயணம் குறித்து, அனைவருக்கும் விளக்கும் வகையில், மாதம், ஒரு மாவட்டத்தில், வைஷ்ணவ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, திருவள்ளூர், சென்னை, வேலுார் உட்பட, ஆறு மாவட்டங்களில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், ஏழாவது மாவட்ட வைஷ்ணவ மாநாடு, திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு, நம்பிள்ளை ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள் தலைமை வகித்தார். மாநாட்டில், மாலோலன் பட்டாச்சாரியார், வெங்கடேச ராமானுஜ தேசிகதாசன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ராமானுஜரின் பாடல்களை பஜனை பாடியவாறு, மாட வீதியில் உலா வந்தனர். ராமானுஜர் கூறியபடி அனைத்து தெய்வங்களும் ஒன்றே. இதில், மதம், ஜாதி பிரிவினை கூடாது என்பதை விளக்கி கருத்தரங்கம் நடந்தது; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.