பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை உற்சவம் நேற்று நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பரமணியர் சுவாமி ÷ காவிலில் நேற்று கிருத்திகை விழாவை முன்னிட்டு மூலவருக்கு காலை 6:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. காலை 11 :30 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு பால் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம், மகா தீபாராதனை செய்தனர். மதியம் 12:00 மணிக்கு, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் 1:00 மணிக்கு, கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (14ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. வரும் 18ம் தேதி தங்க மயில் வாகன உற்சவம், 21ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின் வெள்ளி குதிரை வாகனத்தில் உற்சவர் கிரிவலம் நடக்கிறது. 22ம் தேதி காலை 5:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்து வரு கிறார்.