பழநி: கார்த்திகையை முன்னிட்டு, பழநியில் குவிந்த பக்தர்கள் வின்ச், ரோப்கார் மூலம் மலைக்குசெல்ல 3 மணிநேரம் காத்திருந்தனர்.பழநி மலைக்கோயிலுக்கு சனி, ஞாயிறுகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று கார்த்திகை தினத்தை முன்னிட்டு, அதிகளவு பக்தர்கள் வந்தனர்.இதனால் பக்தர்கள் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் 3 மணிநேரம் காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். பொது தரிசனத்திற்கு வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசை இருந்தது. பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.