பதிவு செய்த நாள்
14
மார்
2016
12:03
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனிப் பெருவிழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின், 10 நாள் பங்குனி பெருவிழா, நேற்று, கிராம தேவதை பூஜையுடன் ஆரம்பமானது. கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக, கோலவிழி அம்மன் கோவிலுக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, வரிசை எடுத்து வரப்பட்டது. இதன்பின், கோலவிழி அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று இரவு, 9:30 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், விநாயகர் உற்சவமும், வெள்ளி மூஷிக வாகன வீதியுலாவும் நடந்தது.