திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை காலை 7.50 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. செங்கோல் விழா 4-ம் நாள் திருவிழாவில் இரவில் 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி நடக்கும் 10-ம் நாள் விழாவில் இரவு 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் ரோஷினி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.