பசித்தவனுக்கு உணவு அளிப்பவன், உண்மையில் இறைவனுக்கே உணவு அளித்தவன் ஆகிறான். பிறருக்குப் பணி செய்து நாம் வாழ வேண்டும் என்றுதான் இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான். பிறருக்கு உதவாத வாழ்க்கை நடமாடும் பிண வாழ்க்கையாகும். தன்னைச் சார்ந்த மக்களுக்கு உழைப்பது தான் உண்மையான இறை வழிபாடு என்று, பசவேசர் கூறியிருக்கிறார். பிறருக்கு அருள்புரிபவர்களே இறையருளைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்கள். ஏழை எளியவர்களை மகிழ்விப்பது இறைவனை மகிழ்விப்பதே ஆகும்.