வீடுபேறு பெற வேண்டும் என்ற ஏகாக்ரசித்தம் வேண்டும். இது பண்டைக் காலத்தில் தோன்றி இன்று வரை நிலைத்துவிட்ட அப்பட்டமான உண்மை. உலகில் ஏதாவது ஒரு நிலையை, பதவியைப் பெறுவதற்கே சில தகுதிகள் தேவைப்படுவதைப் பார்க்கிறோம். அப்படியிருக்கும் போது ஒப்பிலா முக்தி பெறுவதற்குத் தகுதிகள் வேண்டாமா? அதற்கு பக்தி, புலனடக்கம் காமினி காஞ்சனத் தியாகம், தவம், சதா, ஈசுவர சிந்தனை போன்றவை தகுதிகளாகும். முதலில் நோய் இன்னது என்று அறிய வேண்டும். பிறகு முறையாக அந்த நோய் நீங்க மருந்து சாப்பிட வேண்டும். அதுபோல் முத லில் ஜன்ம சம்சாரம் (பிறவிச்சுழல்) என்ற நோய் எப்படிப்பட்டது என்று நாம் அறிய வேண்டும். பிறகு அந்த நோய் நீங்குவதற்கு, ஆன்மிக சாதனைகள் என்ற மருந்தை இடைவிடாமல் - தடைபடாமல் ஏற்க வேண்டும்.