திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.தேவாரபாடல் பெற்ற 276 திருத்தலங்களில், காரைக்குடி கவிஞர் சோமசுந்தரன் தலை மையில் சிவனடியார்கள் 35 பேர் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தினர். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயி லில் காலை சுவாமி தரிசனம் முடிந்ததும் முற்றோதுதல் நிகழ்ச்சி துவங்கியது. சிவசுப்பிரமணியன் இறைவணக்கம் பாடினார். வக்கீல் சிவராமன் வரவேற்றார். தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் தொடக்கவுரை நிகழ்த்தினார். செயலர் மாணிக்கம் அறிக்கை வாசித்தார். முன்னாள் வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன், செயல்அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.