கேரளாவில் பட்டாம்பியை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில், எங்குமே காணாத அபூர்வ விசேஷ பூஜை நடக்கிறது. எல்லா வருடமும் தனுர் மாதத்தில் இந்த பூஜை நடக்கும். அன்று பக்தர்கள் வீட்டில் பக்தியுடன் இடித்த அவலை துணிப்பையில் கொண்டுவந்து கோயில் சாந்திக்காரரிடம் கொடுப்பர். ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அவரவர் பேரில் அந்த அவல் நிவேதிக்கப்பட்டு, பின் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும். ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறிய மூட்டை அவலை குசேலர் கொண்டுவந்து கொடுத்ததை பகவான் உண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களை அளித்தார் அல்லவா ! அதுபோல், தங்களின் வறுமையையும் கண்ணன் நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் அருள்வார் என்பது ஐதீகம்!