ராமாயணம் கேட்கும்போது யாரும் தூங்கக் கூடாது. குறிப்பாக பெண்கள் தூங்கக் கூடாது. ஏன் தெரியுமா? அசோக வனத்தில் சீதையின் உயிர் பிரிய இருந்த நேரத்தில் அனுமான், ராமனின் பெருமையைப் பாடினான். இந்த இசை கேட்டு ராட்சசிகள் தூங்கி விட்டனர். இதைப் பயன்படுத்தி அனுமான் சீதையிடம் ராமன் சொல்லி அனுப்பிய எல்லா விவரத்தையும் சொன்னான் தங்கு தடையின்றி. இதனால்தான் ராமாயணம் கேட்கும்போது தூங்கக்கூடாது என்கிறார்கள். அப்படித் தூங்கினால் அந்த ராட்சசிகளுக்குச் சமமாகும்.